
எழுத்தாளரைப் பற்றி
இமயம்

இமையம் (பிறப்பு மார்ச் 10, 1964) என்ற புனைபெயரில் எழுதும் வெ. அண்ணாமலை, கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்தவர்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற இவர், தனது முதல் நாவலான கோவேறு கழுதைகள் முதல் இன்று வரையிலான படைப்புகளில், வெவ்வேறு கதாபாத்திரங்கள், கருப்பொருள்கள், சூழல்களின் ஊடாக மனித வாழ்வைத் தனக்கே உரித்தான யதார்த்த அழகியலுடன் பதிவு செய்து வருகிறார்.
தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளையும், அதனால் மனிதர்கள் சந்திக்கும் இன்னல்களையும் மனிதத்தன்மையுடன் கவனப்படுத்துகிறது இவரது எழுத்துலகம்.
திராவிட இயக்கத்துடனும் அதன் அரசியலுடனும் நெருக்கமாகத் தொடர்புடைய இவர், தென்னிந்தியாவின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அர்மேனியம் உள்ளிட்ட பல உலக மொழிகளிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழக அரசின் SC/ST ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறார்.
படைப்புகள்
புதினங்கள்
குறுநாவல்
சிறுகதைத் தொகுப்புகள்
சிறப்புப் பதிப்புகள்
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
ஆங்கிலம்
- Beasts of Burden (கோவேறு கழுதைகள்)
Lakshmi Holmstrom · Niyogi Books · 2019
- Arumugam (ஆறுமுகம்)
Katha
- Pethavan – The Begetter (பெத்தவன்)
Gita Subramaniyam · Oxford University Press · 2015
- Video Mariamman and Other Stories
Padma Narayanan · Speaking Tiger Books · 2021
- If There Is a God
Prabha Sridevan · Ratna Publications · 2022
- An Order from the Sky
Vasantha Surya · HarperCollins India · 2023
- A Woman Burnt (செல்லாத பணம்)
G.J.V. Prasad · Simon and Schuster · 2023
- Vaazhga Vaazhga and Other Stories
Prabha Sridevan · Penguin Books · 2023
- She & I (எங் கதெ)
Prof. D. Venkataramanan · Speaking Tiger Books · 2024
- Unbound (செடல்)
Vasantha Surya · Oxford University Press · 2027
எதிர்வரும் வெளியீடு · 2027
பிரெஞ்சு
- Pethavan – Le Père
Editions Caractères · 2020
ஜெர்மன்
- Pethavan – Der Vater
Thomas Vogel · Draupadi Verlag
கன்னடம்
- கோவேறு கழுதைகள்
பாஷா பாரதி · 2009
மலையாளம்
- திரஞ்ஜெடுத்த கதகள்
Edamon Rajan · Olive Publications
இலக்கியப் பயணம்
1964 — 2026
- 1964
பிறப்பு
கழுதூர், கடலூர் மாவட்டம்
- 1994
கோவேறு கழுதைகள்
முதல் நாவல்
- 1999
ஆறுமுகம்
- 2002
இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின்
இளநிலை ஆய்வு நல்கை
- 2006
செடல்
- 2010
தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது
- 2013
பெரியார் விருது
திராவிடர் கழகம்
- 2015
எங் கதெ
- 2018
செல்லாத பணம்
இயல் விருது
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
- 2020
சாகித்திய அகாதமி விருது
செல்லாத பணம்
வாழ்க, வாழ்க
- 2022
குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்காரம்
இப்போது உயிரோடிருக்கிறேன்
- 2024
நெஞ்சறுப்பு
உப்பு வண்டிக்காரன்
- 2025
தண்டகாரண்யத்தில் சீதை
- 2026
நோய்ப்புற்று